அம்பாறையில் திருடப்பட்ட தொலைத்தொடர்பு கோபுர பெட்டரிகள் பொலிஸாரால் மீட்பு
44 தொலைத்தொடர்பு கோபுர பெட்டரிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 இலட்சம் பெறுமதியான பெட்டரிகள்
கைப்பற்றப்பட்டுள்ள பெட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 ரூபா என தெரியவருவதுடன், இதன்படி சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான பெட்டரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெட்டரிகளும் சம்மாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெட்டரிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட பெட்டரிகளுடன் சந்தேகநபர்களை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
