இலங்கையில் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில்
மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைய தெரியவந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் பல்வேறு பிரதேசங்களுக்கு பொருட்களை விநியோகித்தமைக்கான தரவு விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் சந்தையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில இடங்களில் கிடைக்கும் பொருட்கள் பல காரணங்களின் அடிப்படையில் வேறு இடங்களில் கிடைப்பதில்லை எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சில பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்தாலோ அல்லது விற்பனை நிபந்தனை போன்ற தேவையற்ற பிரயோசனங்களை பெற வர்த்தகர்கள் முயற்சித்தால், அப்படியானவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.