சிறுமி இஷா உயிர்வாழ்தலை உறுதிப்படுத்த விரையும் லண்டன் தமிழர்கள்!
இஷா என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற பலர் குருத்தணுக்கொடை(Stem Cell donation) செய்த போதிலும் எவருடைய குருத்தணுவும் அந்தக் குழந்தைக்கு இதுவரை பூரணமாகப் பொருந்தவில்லை என்று தெரிவிக்கின்றார்கள் வைத்தியர்கள்.
இதனால் குருத்தணு கொடைகளை எதிர்பார்த்து நாளை சனிக்கிழமை லண்டன் பெல்தம் (Felthan)பகுதியில் குருத்தணுக்கொடை(Stem Cell donation) நடைபெற உள்ளதாக Tamil Help Line தமிழர் உதவி சேவை தெரிவித்துள்ளது.
சிறுமி இஷா விற்காக குருத்தணுக்கொடை மாதிரிகள் கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படுகின்ற அதேவேளை, ஈழத் தமிழரின் எதிர்கால நலன்கருதி குருத்தணுக்கொடையாளர்(Stem Cell donars) பதிவேடு ஒன்றைத் தயாரித்துப் பேணும் முயற்சியிலும் இரத்தப் புற்றுநோய் பாதுகாப்பு அமைப்பான DKMS ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.