குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2024
நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு தொடர்பிலான செயல்திட்டத்திற்கு அமைவாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களின் தலைமையில் நேற்று(02) நடுத்தீவு சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
செயலமர்வு
இதன்போது, எம்.சாலிஹின் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வில், தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தின் உத்தியோகத்தர், மாவட்ட செயலகத்தின் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் பணிப்பாளர், கிண்ணியா பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்காக கணக்கீட்டு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.



திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
