தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்
சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று (02) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சஜித்துக்கான ஆதரவு
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மக்கள் அலையை தடுத்து, திசைத் திருப்ப எந்த வேட்பாளர்களாலும் இனி இயலாது.
எஞ்சியுள்ள காலங்களிலும் சஜித்துக்கான ஆதரவு அலைகள் உச்சம் தொடவுள்ளன.
இந்நிலையில், வங்குரோத்து வாய்வீரர்களைக் களமிறக்கி, மக்களை ஏமாற்ற முயற்சிக்கப்படுகிறது.
இந்த மண்ணுடனும் பிரதேசத்துடனும் பரிச்சயம் இல்லலாத பலர் வந்து வழங்கும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.
யுத்தம் முடிந்த பின்னர், இப்பகுதிக்கு நானே வந்தேன். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் அமைச்சராகவும் பல வேலைகளைச் செய்தேன்.
மெனிக்பார்ம் முகாமில் மக்களைக் குடியேற்றினேன். காணிகள் இல்லாதோருக்கு காணி வழங்கினேன்.
வைத்தியசாலைகள், பாடசாலைகளை நிர்மாணித்தேன். ஆயிரம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இனம், மதம், கட்சி பாகுபாடின்றி இவற்றை நாம் செய்தோம்.
மனச்சாட்சி உள்ளவர்கள் இவற்றைச் சிந்தித்து, நாம் ஆதரிக்கும் வேட்பாளர் சஜித்திற்கே வாக்களிக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.



பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
