ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட குழப்பம்
ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்ட வாகனங்கள்
ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (30) விடுத்த ஊடக அறிக்கை, இணைப்புச் செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியலில் 95 ஆவது இலகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உதயசாந்த குணசேகர என்ற பெயர் உதயகாந்த குணதிலக என்று மாற்றப்பட வேண்டுமென அறிவிக்கிறோம்.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலகவிற்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த PE-1580 இலக்க TOYOTA HILUX வகை கெப் வாகனம் 2024-09-23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்திற்கு மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.
இந்த செய்தியால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவிற்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துகிறோம் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
