ஜனாதிபதி அநுர மற்றும் முன்னாள் எம்.பி சிறீதரனுக்கு இடையில் முக்கிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் (01) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்கள் தொடர்பான கரிசனை
இதன்போது, 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களையும் சிறீதரன் தெரிவித்ததுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
மேலும், இந்த கலந்துரையாடலின்போது, ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சாதக நகர்வுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் சிறீதரன் வலியுறுத்தினார்.
போர் மெளினிக்கப்பட்டதன் பின்னரும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாதகச் செயல்கள், பௌத்த மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான புதிய அரசாங்கத்தின் கரிசனையையும் இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
மேலும், நினைவேந்தல்கள் உள்ளிட்ட ஈழத் தமிழர்களின் உணர்வு ரீதியான விடயங்களுக்கு மதிப்பளித்து அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் எம்.பி சிறீதரன் இதன்போது கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு நோக்கிய வரலாற்று திருப்பங்கள் நிகழும் காலமாக அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் தரக் கூடிய தூய அரசியல் நகர்வுகள் சார்ந்த பயணத்தில் எங்களது ஆதரவு பரிபூரணமாக உங்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம், முன்னாள் எம்.பி சிறிதரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
