ட்ரம்பால் ஏற்பட போகும் நெருக்கடி: பிரான்ஸ் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் நடத்திய ஸ்டார்மர்
அமெரிக்காவின் புதிய ஜனாபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், அவர் முன்னெடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து பல நாடுகளின் மத்தியில் பதற்றநிலை நிலவுகின்றது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பானது, பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பல நாடுகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி விதிப்புகள்
இதன்விளைவாக, குறிப்பாக வரி விதிப்புகளில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ள நிலையில் வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச ரீதியில் அச்சம் நிலவுகிறது.
இவ்வாறிருக்கையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாரிஸில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இருவரும் உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்துள்ளதுடன் உக்ரைனை வலிமையான நிலையில் வைப்பதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், மத்திய கிழக்கு குறித்த உரையாடலின் போது, காஸா மற்றும் லெபனான் நிலைமையில் ஆழ்ந்த கவலையை இரு தலைவர்ளும் வெளிப்படுத்தி கொண்டதுடன் மேற்குக் கரையில் ஸ்திரத்தன்மை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.





30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
