ஸ்டான் வாவ்ரிங்கா டென்னிஸிலிருந்து ஓய்வு
மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் நட்சத்திரமான ஸ்டான் வாவ்ரிங்கா டென்னிஸ் விளையாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.
பாசல் நகரில் நடைபெற்ற சுவிஸ் இண்டோர்ஸ் தொடரின் முதல் சுற்றில், 41 வயதான வாவ்ரிங்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவிடம் 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ஓய்வு
23 ஆண்டுகள் நீடித்த அவரது தொழில்முறை வாழ்க்கையில் 985 போட்டிகளில் விளையாடி 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 16 சர்வதேச பட்டங்களையும் வென்றுள்ளார்.

வாவ்ரிங்கா தான் வென்ற 3 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளிலும் அன்றைய காலகட்டத்தில் உலகின் முதன்மை இடத்திலிருந்த வீரர்களை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.