பா.ஜ.க.வின் பணபலத்தை உடைத்தெறிந்து மகத்தான வெற்றியை பதிவுசெய்துள்ளோம்: ஸ்டாலின் பெருமிதம்
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம், அதிகார மீறல்கள், ஊடகப் பரப்புரை ஆகியவற்றை உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றி என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்(M. K. Stalin) கூறியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இது அமைந்துள்ளது எனவும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பொது தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் அமோக வெற்றியை திமுக தன்வசப்படுத்திய நிலையில் ஸ்டார்லின் இதனை கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது!
— M.K.Stalin (@mkstalin) June 4, 2024
அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான… pic.twitter.com/4FioIru7cj
திமுக கூட்டணி
தமிழ்நாடு மாநிலம் கோவையில் வெற்றி நிச்சயம் என முழங்கிய அண்ணாமலை தோல்வியடைந்த நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர்.
சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.” என்றார்.
எனினும் , இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் பின்தள்ளியுள்ள நிலை பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகளை பின்தள்ளி அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[V35KIIM ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |