தென்னிலங்கையில் அரசியல்வாதியை கொலை செய்ய சதி முயற்சி
தென்னிலங்கையில் அரசியல்வாதியை ஒருவரை கொலை செய்ய நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்பவர் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதும், இலக்கு தவறியமையால் உயிர் தப்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் வெற்று தோட்டா ஒன்றும், கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

பந்துல பிரசன்ன என்பவரை இலக்கு வைத்து ஒன்பது மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதும், அதிலிருந்தும் அவர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam