அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன்(10) ஒப்பிடும் போது, இன்றையதினம்(15) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையாக உள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 311.78 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 319.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 224.98 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 233.02 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366.04 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 377.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்டெர்லிங் பவுன்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 434.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri