ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பது தொடர்பில் சீனா மகிழ்ச்சி!ட்ரம்ப் அறிவிப்பு
தாம் ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பது தொடர்பில் சீனா மகிழ்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,சீனா உள்ளிட்ட முழு உலகத்திற்காகவுமே தாம் இதனை மேற்கொள்வதாகவும் இனி இந்த நிலைமை மீண்டும் ஒருபோதும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கைக்கு பதிலாக சீனா இனி தெஹ்ரானுக்கு ஆயுதங்களை அனுப்பாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க முயற்சிகள்
அத்தோடு, இன்னும் சில வாரங்களில் தாம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாங்கள் புத்திசாலித்தனமாகவும், மிகச் சிறப்பாகவும் இணைந்து செயல்படுகிறோம் எனவும் ட்ரம்ப் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாங்கள் இருவரும் சண்டையிடுவதிலும் மிகவும் வல்லவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் மற்றவர்களை விட அதனை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri