இந்திய மத்திய ஆட்சியில் ராஜாக்களாகும் இரண்டு அரசியல்வாதிகள்
இந்தியாவில் தற்போது தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ள பிரதமர் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி (BJP), பீகார் முதலமைச்சர் நிதிஸ்குமார் (Nitish Kumar) மற்றும் ஆந்திர பிரதேஸின் எதிர்கால முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Chandirababu Nayudu) கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணி தற்போது 300 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
டெல்லி இமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம் தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் அந்தக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா கூட்டணி
இதனையடுத்து, குறித்த கூட்டணிகளின் தயவில் இனி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள், தமது கூட்டணி பெற்றுள்ள வெற்றி குறித்து திருப்தியடைந்துள்ளனர்.
230இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கூட்டணியினரும், நிதிஸ்குமார் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அழைத்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற முனைப்பில் உள்ளனர்.
டில்லியில் ஆலோசனை
இதனையடுத்து, அதற்கான பேச்சுவார்த்தைகளை அந்த கூட்டணியின் இருக்கும் மூத்த தலைவரான சரத் பவர் ஆரம்பித்துள்ளார்.
நிதிஸ்குமாரிடமும் சந்திரபாபு நாயுடுவிடமும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி டில்லியில் ஆலோசனையில் ஈடுபடுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



