ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது - 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு
ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம்..
பேலியகொடைப் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் திகதி 4 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri