ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழ் அரசியல் பிரமுகர்கள்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தமது வாக்கினை அளித்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (14) காலை கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குடத்தனை அமெரி்க்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தமது வாக்கினை செலுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் - எரிமலை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam