மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, காலை 8 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 7% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் சீரற்ற காலநிலை இருக்கும் என்பதால் காலை வேளையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி-திருமால்





விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri