மற்றுமொரு சிறைச்சாலையில் பதற்ற நிலை - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர முயற்சி
இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியற்ற பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று இரவிலும் இந்த அமைதியின்மை ஏற்பட்டுப் பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மீண்டும் அமைதியின்மை
இன்று காலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார அறிவித்துள்ளார்.
நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்