போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை.!

Sri Lanka Police Kilinochchi S. Sritharan
By Rukshy Nov 08, 2024 01:49 PM GMT
Report

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan), மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் விசமப் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக இன்றையதினம் (08) கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும் பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை

அத்தகைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றையதினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன.

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை.! | Sritharan Legal Action Against Fake Information

அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன்.

உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்

இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை.! | Sritharan Legal Action Against Fake Information

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள்.

அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US