அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை (Susie Wiles ) ட்ரம்ப் நியமித்துள்ளமை உலக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
வெற்றிகரமான பிரசாரம்
சூசி, நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை நிர்வகித்துள்ளார்.
சூசி வைல்ஸை பற்றி ட்ரம்ப் கூறுகையில், ”அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசி வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.
என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் அவர் இருந்தார். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர்.
32வது தலைமை அதிகாரி
மேலும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி தொடர்ந்து அயராது உழைப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட சூசி தகுதியானவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் 32வது தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
