வேட்டையாடிகள் சிக்குகின்றனர் வேட்டைக்காரர்கள் தப்புகின்றனர்: சுட்டிக்காட்டும் சிறீநேசன் எம்.பி.

Sri Lankan Tamils Tamils Ilankai Tamil Arasu Kachchi Mahinda Rajapaksa
By Rakesh Aug 01, 2025 06:07 AM GMT
Report

"தமிழின அழிப்பு விடயத்தில் வேட்டையாடிகள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வேட்டைக்கு ஆணையிட்ட வேட்டைக்காரர்கள் இன்னும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. இது விடயத்தில் அம்புகள் மாட்டிக் கொண்டுள்ளன. எய்தவர்கள் இதுவரை கைதாகவில்லை" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இந்தக் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தீர்வை வரி குறைப்பு! இலங்கைக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றி

அமெரிக்காவின் தீர்வை வரி குறைப்பு! இலங்கைக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றி

இறுதி யுத்தம்

அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இறுதி யுத்தம் 2005இல் இருந்து 2009 வரை தீவிரமாக நடைபெற்றது. அதன்போது மனிதக் கடத்தல், சித்திரவதைகள், காணாமல் ஆக்குதல் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.


அதற்குக் கருவிகளாகச் செயற்பட்டதாகக் கூறப்படுவோர் இந்த ஆட்சியில் கைதாகி வருகின்றனர் . ஆனால், கர்த்தார்களாக இருந்த இயக்குநர்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்திலும் அம்புகள் அகப்படுகின்றனர். தொடுத்த வில்லர்கள் இன்னும் கைதாகவில்லை.

வேட்டையாடிகள் சிக்குகின்றனர் வேட்டைக்காரர்கள் தப்புகின்றனர்: சுட்டிக்காட்டும் சிறீநேசன் எம்.பி. | Srinesan Mp Statement About Srilankan Tamils

எனவே, இந்த விடயத்தில் நாசகார வேலைகளின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை அளிப்பதற்கு உதவும். மாறாக வேட்டையாடிகளை மாத்திரம் கைது செய்வதால், நீதி கிடைக்கப் போவதில்லை.

நாட்டின் சாபக்கேடு

1956 இல் இருந்து 2015 வரை இன அழிப்பில் ஈடுபட்ட வேட்டைக்காரர்களோ, வேட்டையாடிகளோ இதுவரை தண்டிக்கப்படாத குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் அதியுச்சப் பதவிகளையும் வகித்து வந்துள்ளனர். இவைதான் இந்த நாட்டின் சாபக்கோடாகவுள்ளது. இதனால் குற்றவாளிகளின் ஆளுகையினால் நாடு குட்டிச்சுவராகியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஊழல், மோசடிகள், கொள்ளை, கொலை தாண்டவமாடியதால் நாடு நாசமாக்கப்பட்டுள்ளது. பாரிய குற்றச் செயல்களுக்கான பெரிய பெருந்தலைகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தகுதி தராதரம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கான பெருந்தலைகள் மறைக்கப்படும் வரை இந்த நாடு உருப்பட வாய்ப்பு இல்லை. குற்றச் செயல்களுக்கான சூழலை உருவாக்குதல், குற்றங்களைச் செய்ய வாய்ப்பளித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல், குற்றவாளிகள் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்தல் என்பன நடைபெறுவதால் இந்த நாட்டில் தீர்வுக்கான உள்நாட்டுப் பொறிமுறை உருக்குலைந்து போயுள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

வேட்டையாடிகள் சிக்குகின்றனர் வேட்டைக்காரர்கள் தப்புகின்றனர்: சுட்டிக்காட்டும் சிறீநேசன் எம்.பி. | Srinesan Mp Statement About Srilankan Tamils

பொதுமன்னிப்பில் விடுதலை

வெலிக்கடைப் படுகொலைக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விமானக் கடத்தலில் ஈடுபட்ட சிங்களக் கைதி மற்றும் மிருசுவில் படுகொலையாளியும் மரண தண்டனைக் குற்றவாளியுமான சுனில் ஆகியோர் ஜனாதிபதிகளின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதும் பாரிய குற்றவாளிகளை இனவாத ரீதியில் பாதுகாக்கும் செயல்களாக அமைந்தன.

எனவே மனிதக் கடத்தல் காணாமல் ஆக்குதல், படுகொலைகள், வதைகள், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் போன்ற பாரிய குற்றங்களுக்குக் கால்கோளிட்ட சூத்திரதாரிகள் வெளிச்சப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அம்புகள், வேட்டையாடிகளை மாத்திரம் தண்டிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ, பரிகாரமோ கிடைக்காது. மனிதமும் நீதியும் செத்தால் சனநாயகம் பிணநாயகம் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார். 

ஒக்டோபர் 1ஆம் திகதியில் பேரிடியாகும் இலங்கை அரசின் அறிவிப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதியில் பேரிடியாகும் இலங்கை அரசின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US