எல்லா சிங்கள தலைவர்களும் குற்றமிழைத்த படையினரையே பாதுகாக்கின்றனர்: சிறீநேசன் குற்றச்சாட்டு
இந்த நாட்டில் சிங்கள தலைவர்கள் என்பது வலதுசாரியாகயிருந்தாலும் இடதுசாரியாகயிருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (02.02.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டு்ள்ளார்.
இதன்போது மேலும் அவர், "ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இதனை தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்வி எங்களிடமிருந்தது.
மனித உரிமைகள் அவலங்கள்
இந்த பேரவையின் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்துகள் தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஏமாற்றமானதாகவே இருந்தது.
இறுதி யுத்ததின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் அவலங்கள் தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான பொறுப்புக்கூறலை பார்க்கின்ற போது அமைச்சரின் கருத்து ஏமாற்றத்தினையளித்தது.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியானாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்றாலும் இந்த கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்பட்டதைவிட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளேயிருந்தது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது இறுதி யுத்ததில் நடைபெற்ற விடயங்களின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், உண்மைகள் கண்டறியப்பட்டால் அதற்கான நீதிகள், பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அவை வழங்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
முந்தைய அரசாங்கங்கள்
ஆனால் வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துகளை பார்க்கின்ற போது அவர் உள்நாட்டு பொறிமுறையின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற அடிப்படையிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக உள்ளக பொறிமுறையினை பயன்படுத்தி இறுதி யுத்த விடயங்களை கையாளலாம் என்று சொல்லியுள்ளார்கள்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில் யுத்தம் நிறைவுபெற்று 16ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உள்பொறிமுறை எங்களுக்கு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. விஜயதாச ராஜபக்ஸ அமைச்சராகயிருந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்கி கோவையினை மூடிவிடலாம் என்று கருதினார்கள் அது வெற்றியளிக்கவில்லை.
சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் வலதுசாரி கட்சிகள் என்றாலும் இடதுசாரி கட்சிகள் என்றாலும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகள் என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை தருகின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதை விட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 23 மணி நேரம் முன்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri
