கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: உதவிப் பணிப்பாளரின் நடவடிக்கைக்கு கண்டனம்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
9 பெண் சுகாதார உதவியாளர்கள்
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த சம்பவம் ஒரு அரச அதிகாரியால் எமது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் (சரத்து 12) , 12(1),12(2) பிரகாரம் மீறப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன் இப்படியான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது . இதன் பின்னணி , இவருக்கு இந்த அதிகாரம் யாரால் வழங்கபட்டது .

அப்படியாயின் இதற்காக பூரண விசாரனை நடாத்தி இவ்வாறான இனமுறுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை இல்லாது செய்து உரிய அதிகாரிக்கு சட்டநடவடிக்கை எடுத்து இன நல்லிணக்கத்தை உறுதிப் படுத்த அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என இக்கண்டன அறிக்கை மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
கடந்த காலங்களிலும் திருகோணமலை (2018.04.25)சண்முகா கல்லூரி சம்பவம், திருகோணமலை சாஹிரா மாணவர்களின் உயர்தர பெறுபேறு வெளியிடுதல் கால தாமதம் இவ்வாறு தொடர்ந்து எமது சமூகம் காலாகாலமாக போராடித்தான் சாதாரண உரிமைகளை கூட பெற வேண்டியுள்ளது. இந்த வரலாறுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.