கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க என்பவரின் மனைவியான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) தம்பதியரின் பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
உதவியால் நேர்ந்த விபரீதம்
தனுஷ்க விக்கிரமசிங்க இலங்கையிலிருந்து கனடாவுக்கு சென்று பல ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த கோடையில் அவரது குடும்பத்தினரும் கனடா சென்றுள்ளனர்.
இந்நிலையில்,சில மாதங்களுக்கு முன்னர் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
இதன்போது கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியமையினால், தனுஷ்க விக்கிரமசிங்க அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்துள்ளது.
இதன்போது வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை மார்பிலும் முதுகிலும் கத்தியால் டி ஸோய்சா குத்தியுள்ளார்.
சந்தேகநபர் கைது
இதன்போது காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மனைவி, பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்தா என தனுஷ்க கேட்டபோது, இல்லை என சந்தேகநபர் பொய் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் பொலிஸார் டி ஸோய்சாவைக் கைது செய்துள்ளதுடன், தனுஷ்க, மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் வீட்டில் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஷ்க, இன்னமும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
