அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை காலமும் பணியாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிரடி படையினருக்கு பதிலாக ரக்னா லங்கா தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மீளப்பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அதிரடிப்படை வீரர்கள்
இதுவரை 200 பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் களனிகம, சீதுவ, குருந்துகஹ ஹதெக்ம, பின்னதுவ மற்றும் சூரியவெவ ஆகிய முழு நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள ஐந்து முகாம்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
