உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.
இன்று (07.10.2023) டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.
தென்னாபிரிக்கா அணி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணி 17 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன பங்குபெறமாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதையிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இரண்டு போட்டிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
