புகைப்பிடித்த காரணத்தால் பணிப்புறக்கணிப்பு! கடும் அதிருப்தியில் தொடருந்து பயணிகள்
இலங்கையில் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்ட தொடருந்து சேவைப்புறக்கணிப்புகள் பல மில்லியன் பயணிகளை சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் சிகரட்டுக்காக 78 தொடருந்துகள் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் மாளிகாவத்தை முற்றத்தில் புகைப்பிடித்த போது உதவி தொடருந்து காவலர், பாதுகாவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடருந்து சேவை
இதனையடுத்து சீருடையில் இல்லாத தொடருந்து காவலர், பாதுகாவலரால் தாக்கப்பட்டதாகக் கூறி வாக்குவாதம் தாக்குதலில் முடிந்தது. இதனையடுத்து அன்று மாலை திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவிருந்த 78 தொடருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டன.
சேவைப்புறக்கணிப்புக்கள் மற்றும் நெரிசலான தொடருந்துகளால்
அதிருப்தியடைந்துள்ள தொடருந்து பயணிகள், தொழிற்சங்கங்கள் தங்கள் தனிப்பட்ட
பிரச்சினைகள் மற்றும் திணைக்களத்தின் நிர்வாகக் குறைபாடுகளுக்காக சேவைகளில்
இருந்து விலகியிருப்பதாக விமர்சித்துள்ளனர்.
இந்தநிலையில் பயணி ஒருவரின் கருத்தை ஊடகம் ஒன்று பிரசுரித்துள்ளது.
இன்று சிகரட்டுக்காக பணிப்புறக்கணிப்பை நடத்தியவர்கள், நாளை பீடிக்காகவும் பயணிகளை கஷ்டங்களுக்கு உள்ளாக்க தயங்கமாட்டார்கள் என்று அந்த பயணி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
