மகிந்த தொடர்பில் அநுரவிற்கு சீனாவின் எச்சரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு சீனா இதுவரை பெரிதாக நிதி உதவிகளை செய்யவில்லை.
இவ்வாறிருக்க, அநுரகுமார திஸாநாயக்காவிற்கு சீனா ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுதிருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை துன்புறுத்த வேண்டாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.
இதேவேளை, அநுர அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்தே முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது நடவடிக்கை எடுத்ததாக அரூஸ் கூறியுள்ளார்.
எனினும், சீனாவின் எச்சரிக்கை காரணமாக மகிந்த மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை அநுர அரசு இரத்து செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



