அமைச்சரின் சொத்து அறிவிப்பில் கிரிப்டோகரன்சிகள்..! அரசாங்கம் மீது புதிய விமர்சனம்
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்து அறிவிப்பில் எவ்வாறு கிரிப்டோகரன்சிகள் இடம்பெற்றன என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமயவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அமைச்சர் வசந்த கூறியது போன்று அவர் தனது தாத்தா மூலம் சொத்துக்களை பெற்றார் என்பதை ஏற்றுக்கொள்வோம்.
உலக வரலாற்றை மாற்றிய இலங்கையர்
அப்படியானால், சொத்து அறிவிப்பில் உள்ள கிரிப்டோகரன்சி பங்கும் தாத்தாவின் சொத்தாக இருக்க வேண்டும்.
2009ஆம் ஆண்டு கிரிப்டோகரன்சியை சடோஷி நகமோட்டோ கண்டுபிடித்தார். ஆனால் உடனடியாக அந்தப் பெயரை அமைச்சர் வசந்தவின் தாத்தாவின் பெயரால் மாற்ற வேண்டும்.
உலக வரலாற்றை மாற்றிய அத்தகைய இலங்கையரை நாம் எப்படி தவறவிட்டோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



