மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின் பணியின் போது துப்பாக்கி ரவைகள் கடந்த 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸ் விசாரணை
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதற்கிணங்க விடயம் தொடர்பாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று (21) ரவைகளை மீட்டெடுப்பதற்கான அனுமதியை கோரினர்.
அதற்கிணங்க ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய ரவைகள் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri