இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நடவடிக்கை: அமைச்சர் மனுஷ நாணயக்கார
இஸ்ரேலிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்குமிடையிலான பாரிய மோதலினால் இரு தரப்புக்கும் இடையில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல்களில் இதுவரையிலும் ஒரு இலங்கையர் மாத்திரமே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு கவலை
இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு கவலை
இரு தரப்புக்கும் இடையில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வன்முறை நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறும் இலங்கை கூறியுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மோதல் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதல்களில் இதுவரையிலும் ஒரு இலங்கையர் மாத்திரமே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |