இஸ்ரேல் - பாலஸ்தீன உச்சக்கட்ட பதற்றம்! உடனே வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை ஹமாஸ் ஆயுதக்குழுவினர், காசாவில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகள் மூலம் தாக்கிய நிலையில் இஸ்ரேல் முழுவதும் போர் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இதுவரையிலும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை ஹமாஸ் சந்திக்க நேரிடும் என்று சூளுரைத்துள்ளார்.
மேற்கு கரை பகுதி வன்முறை
இதையடுத்து, காசா மீது SWORDS OF IRON என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கூறப்படும் காசா டவர் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் காசா பகுதியில் உள்ள 150 இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 20 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.
பணயக் கைதிகள்
அத்துடன் ஹமாஸ் தாக்குதல்களால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 100 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் வீரர்கள் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மேற்கு கரை பகுதியில் வன்முறை பரவியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |