எலிசபெத் மகாராணிக்கு புதிய முறையில் இரங்கலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கன்
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் புதிய முறையில் தனது இரங்கல் வெளியிட்டுள்ளது.
வித்தியாசமான முறையில் இரங்கல்
மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் உருவப்படத்தை விமானத்தில் வரைந்து, வித்தியாசமான முறையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
@flysrilankan, in an endeavour to pay the island nation’s tribute to Her Majesty Queen Elizabeth II, has adorned the livery of one its long-haul aircraft. The livery design celebrates the life & reign of the Queen in the aspect that she had been a living icon of the stateliness. pic.twitter.com/oXGDV8FRWm
— SriLankan Airlines (@flysrilankan) September 19, 2022
மகாராணிக்கு மரியாதையான பிரியாவிடையை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இதனை செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1952 முதல் 1972 ஆம் இலங்கையை ஆட்சி செய்த மகாராணி
இரண்டாவது எலிசபெத் மகாராணி பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருந்துள்ளதுடன் 1952 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இலங்கையின் ராணியாக ஆட்சி செய்தார்.
1972 ஆம் ஆண்டு பின்னர் பிரித்தானிய முடியாட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கையில் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.