விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து அச்சப்பட்ட இலங்கை அரசாங்கம்!அதுவே வெற்றி-சுரேஸ்

Sri Lanka Labour Party Sri Lanka Politician Suresh Premachandran Sri Lankan political crisis Sri Lanka Government
By Chandramathi Feb 06, 2023 05:15 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பின் மீதான அச்சம் காரணமாகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் தயாராக இருந்தாகவும் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதற்கான திராணியும் விடுதலைப்புலிகளிடம் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளதாகவும் எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே விடுதலைக்காக போராடிய தமிழினத்திற்கு தீர்வு என்ற ஒன்று வரும் வரையில் அனைத்துக்கட்சிகளும் ஒருமித்து செயற்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கஜேந்திரகுமார் ஒரு கருத்தையும் சுமந்திரன் இன்னொரு கருத்தையும் தாங்கள் இன்னொரு கருத்தையும் கூறிக்கொண்டிருந்தால் அரசாங்கத்திற்கு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US