அர்ச்சுனா எம்பியின் பதவி விவகாரம் குறித்து நீதிமன்றின் தீர்மானம்
அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் செல்லுபடித் தன்மையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 'கியோ வாரண்டோ' (Quo Warranto) மனு மீதான விசாரணை டிசெம்பர் 16, 2026ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று (12) நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகள் குழாம் பூரணமாக அமையாததால் விசாரணையைத் தொடர முடியாமல் போயுள்ளது.
இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான புதிய பதிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி கெளசல்யா நரேந்திரன், தனது வாடிக்கையாளர் புதிய சட்டத்தரணிகளை நியமிக்க உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
நீதிமன்றில் ஏற்பட்ட சிக்கல்..
இதன்படி, நீதிபதிகள் மாயாதுன்னே கோரியா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், வழக்கு விசாரணையை டிசெம்பர் 16ஆம் திகதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2024 பொதுத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த போது, அர்ச்சுனா அரசு மருத்துவ அதிகாரியாகவே தொடர்ந்திருந்தார் என்பதால், அரச அதிகாரியாக இருக்கும் ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கும் அரசியலமைப்பு விதிகளின்படி அவர் எம்பியாகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என மனுதாரர் ஓஷல ஹேரத் முறையிட்டுள்ளார்.
இருப்பினும், தான் சம்பளமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்ததால் தகுதியிழப்பு விதியின் கீழ் அரச அதிகாரியாகக் கருதப்பட முடியாது என அர்ச்சுனாவின் தரப்பு முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், மனு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை அல்லது நீதிமன்றம் வேறு உத்தரவைப் பிறப்பிக்கும் வரை அர்ச்சுனா தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan