இலங்கையிலிருந்து தம்மாம் செல்லும் விமானச் சேவை தற்காலிக இடைநிறுத்தம் - பயணிகளின் கவனத்திற்கு..
சவூதி அரேபியாவின் கட்டுநாயக்கவிற்கும் தம்மாமிற்கும் இடையேயான தனது விமான சேவைகளை 18ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(12.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் நிலவும் இராணுவச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத் தகவல் தொடர்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு..
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும், வர்த்தக விமானப் போக்குவரத்திற்கு நிலைமை உகந்ததாகக் கருதப்பட்டவுடன் விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, இலங்கைக்குள் இருந்து 1979 என்ற எண்ணையும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளவும்.
மேலும், +94 74 444 1979 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் அல்லது www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்றும் விமான நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan