வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பிக்கு கைது
தங்காலையில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வைத்து இளம் பிரெஞ்சு பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி தங்காலை, கடாம்போகனை பகுதியிலுள்ள விகாரைக்கு தியானம் செய்வதற்காகச் சென்ற 32 வயதான பிரெஞ்சு பெண், தியான அறைக்கு வழி தெரியாமல் அங்கிருந்த துறவியிடம் உதவி கேட்டுள்ளார்.
இதன்போது அந்த துறவி, அப்பெண்ணை பொதுமக்கள் நடமாட்டமில்லாத தனிமையான கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை..
அங்கு துறவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பெண் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, துறவி அவரைப் பின்தொடர்ந்து தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

எனினும், அப்பெண் அவரிடமிருந்து தப்பித்து வெளியேறிய ஜெர்மன் நாட்டு நண்பர் ஒருவரின் உதவியுடன், தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் கைது செய்யப்பட்ட துறவி, தான் மதச் சடங்கிற்காகவே அவரை அழைத்துச் சென்றதாகக் கூறி குற்றச்சாட்டை மறுத்ததுடன், வழக்கை மீளப் பெறுமாறு அப்பெண்ணிற்கு அழுத்தங்களும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட துறவி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், இந்த வழக்கு விசாரணை 2027 பெப்ரவரி 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan