ஈரான் தலைவர்களின் மறைவுக்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வ இரங்கல்! - நளிந்த ஜயதிஸ்ஸ
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் போரில் உயிரிழந்த ஈரான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, இலங்கை அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தனது இரங்கலைத் தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(2) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துக் கூறுகையில் ஈரான் அரசுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கு இலங்கை அரசு தனது இரங்கல் செய்தியை வெளியிடும்.
உறவைப் பேணி
இதற்கான பணிகளை வெளிவிவகார அமைச்சு விரைவில் முன்னெடுக்கும், எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைவர்களுடன் இலங்கை நீண்டகாலமாக நெருக்கமான உறவைப் பேணி வரும் நிலையில், அவர்களின் மறைவுக்கு இதுவரை ஏன் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார் இலங்கையின் எரிபொருள் தேவை மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈரான் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், தற்போதைய போரினால் உயிரிழந்த அந்த நாட்டுத் தலைவர்களுக்கு உரிய முறையில் அரசாங்கம் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam