குவைத் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்
புதிய இணைப்பு
குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் மூன்று அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள்கள் "தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த விமானங்கள் விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
At 11:03 p.m. ET, March 1, three U.S. F-15E Strike Eagles flying in support of Operation Epic Fury went down over Kuwait due to an apparent friendly fire incident.
— U.S. Central Command (@CENTCOM) March 2, 2026
Read more:https://t.co/i2y3Q3vo2E
முதலாம் இணைப்பு
குவைத்தில் அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாகியதாகவும் வீரர்கள் யாருக்கும் காயமில்லை எனவும் குவைத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இன்று காலை பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளான" என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி..
"வீரர்கள் காயமடையாமல் உயிர் பிழைத்தனர், மேலும் அவர்கள் வெளியேற்றப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் பணியாளர்களின் நிலைமை நிலையானது" என்று குவைத் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.
"சம்பவத்தின் சூழ்நிலைகள்" குறித்து அதன் அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து வருவதாகவும், சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.