திருகோணமலை கந்தளாய் பகுதியில் வாள் வெட்டு: இருவர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணித்தகராறு காரணமாக வெட்டுக்குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை சனிக்கிழமை (11) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் - பேராறு பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 48 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாவும் பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான 28 வயதுடைய ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைக்கான காரணம்
கந்தளாய் பேராறு பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கான காணித்தகராறு காரணமாக மது போதையில் சென்று மற்றொருவரை வளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதோடு, சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri