யாழில் இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்: இருவர் கைது
யாழ். அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் இருந்து வரும் முறுகல் காரணமாக அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று மாலை இளைஞன் ஒருவன் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த தாக்குதலில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார். சந்தேகத்தினடிப்படையில் குட்டியப்புலம் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் அச்சுவேலி பொலிஸார் மேலும் சிலரை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
