சீன உள்விவகாரங்களில் ஐ.நா தலையீடு செய்யக் கூடாது: இலங்கை
சீன உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்யக்கூடாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 50ம் அமர்வுகளில் பங்குபற்றியுள்ள இலங்கை பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பக்கச்சார்பற்ற வகையிலும், ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பாச்செலட் சீனாவிற்கு மேற்கொண்ட விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரே சீனா என்ற கொள்கையை எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை ஆதரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மெய்யான பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை எட்ட முடியும் என இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ண அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
