பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு
மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.

மனித உடலின் சராசரி வெப்பநிலை சுமார் 37 பாகை செல்சியஸாக காணப்பட வேண்டும். இந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam