இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை மூலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏல விற்பனை செய்யப்படவுள்ள உண்டியல்கள்
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam