இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறாது எனவும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடப்புத்தகங்கள் அச்சிடல்
மேலும், 2024 ஆம் ஆண்டிற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |