பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்ற இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 12,822 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,998 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், பண்டிகைக் காலமான டிசம்பர் மாதத்திலே வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த தமது அனுபவங்களை இந்த மக்கள் கருத்து நிகழ்ச்சியின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி வருமாறு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |