அவுஸ்திரேலியாவில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த நித்திஸ்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்டர் -கவாஸ்கர் கிண்ணத்துக்கான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் மூன்றாம் நாள் இன்று இடம்பெற்றது.
ஆட்டம் ஆரம்பித்தபோது, நெருக்கடியான நிலையில், துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி, நித்திஸ்குமார் ரெட்டி மற்றும் வோசிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம், நெருக்கடியை தவிர்த்துக்கொண்டது
இன்றைய நாள் ஆட்ட ஆரம்பத்தின்போது 7 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றிருந்த இந்திய அணி, பொலோ ஒன் - ஐ தவிர்க்க 111 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இருந்தது.
நித்திஸ்குமார் ரெட்டி
எனினும் நித்திஸ்குமார் ரெட்டி மற்றும் வோசிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கியதுடன், சுந்தர் 50 ஓட்டங்களையும் நித்திஸ்குமார் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதில் நித்திஸ்குமார் ரெட்டி இளம் வயதில் அவுஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெயரை பெற்றார்
முன்னதாக சச்சின் டெண்டுல்கார் தமது 18 வயதிலும், ரிசப் பண்ட் தமது 21 வயதிலும் சதம் பெற்றிருந்தனர்
இந்த வரிசையில் இன்று நித்திஸ்குமார், 21 வயதில் அவர்களுடன் இணைந்துள்ளார்.
இதேவேளை இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 474 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடும் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது, 9 விக்கட்டுக்களின் இழப்புக்கு 358 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |