அநுர அரசின் தாமதம் : பிரித்தானியா உட்பட பல நாடுகளின் தூதரகங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களில் தூதுவர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிரந்தர தூதுக்குழு, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பிரேசில் மற்றும் 20 நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த நாடுகளுக்கான தூதுவர்களோ, உயர்ஸ்தானிகர்களோ நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தூதுகவர்களை நியமிக்கும் செயற்பாடு
ஐக்கிய நாடுகளின் நிரந்தர தூதுக்குழு, பிரித்தானியா, இந்தியா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளுக்கான தூதுகவர்களை நியமிக்கும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்காரணமாக பதில் தூதர்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, இலங்கைக்காக சுமார் 60 தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் வெளிநாடுகளின் துணைத் தூதரக பொது அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உயர் அதிகாரிகள் இல்லாமை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.