புதிய முறையில் புத்தாண்டு தின உறுதிமொழி! தயாராகும் அரச ஊழியர்கள்
எதிர்வரும் 2025ம் ஆண்டின் புதுவருட தினத்தில் அரச ஊழியர்கள் வித்தியாசமான முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கும்போது , அதில் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளடக்கத்தையும் வழங்குவார்கள் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் புத்தாண்டு தின உறுதிமொழி நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.
புதிய ஆண்டின் கடமை
அதன் பிரகாரம், புதிய ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முதற்கட்டமாக 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
