வவுனியாவில் இருவர் துப்பாக்கியுடன் கைது
வவுனியாவில் (Vavuniya) 50க்கு மேற்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்கள் மற்றும் துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகர், பூவரசங்குளம், நெடுங்கேணி, ஒமந்தை, கனகராயன்குளம் என வவுனியா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் கத்தி முனைகளில் வீடுகளில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டமை என 50க்கு மேற்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் வன்னி மாவட்ட பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான நபர் வீட்டில் தங்குவது இல்லை என்பதுடன் வனப்பகுதிகளிலேயே தங்குவதை வழமையாக கொண்டிருந்தார்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையிலேயே, வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் கீழ் 43 வயதுடைய குறித்த நபரை உள்நாட்டு துப்பாக்கி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் இரு இயந்திரங்களுடன் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு உதவியாக செயற்பட்டார் என சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட பிரதான நபருக்கு எதிராக நீதிமன்றில் நான்கு திறந்த பிடியாணை மற்றும் ஆறு திகதியிடப்பட்ட பிடியாணை என்பன இருப்பதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்படுகின்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்குரிய நடவடிக்கைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri